பிஹார் தேர்தலில் போட்டியிடவில்லை: பிரசாந்த் கிஷோர் | Bihar Election | Prashant Kishor |

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள்...
பிஹார் தேர்தலில் போட்டியிடவில்லை: பிரசாந்த் கிஷோர் | Bihar Election | Prashant Kishor |
ANI
1 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ல் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் மூன்றாவது பெரிய அணியாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 51 வேட்பாளர்கள், இரண்டாவது கட்டமாக 65 வேட்பாளர்கள் என இதுவரை மொத்தம் 116 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இவ்விரு வேட்பாளர்கள் பட்டியலிலும் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம்பெறவில்லை.

காரணம், பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டால் அவருடைய சொந்தத் தொகுதியான கர்காஹர் தொகுதியில் போட்டியிட வேண்டும். ஆனால், ஜன் சுராஜின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் கர்காஹர் தொகுதியில் ரிதேஷ் ரஞ்சன் பாண்டே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தேஜஸ்வி யாதவின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பிரசாந்த் கிஷோர் முன்பு பேசியிருந்தார். இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ரகோபூர் தொகுதியில் சஞ்சல் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. எனவே, இந்த இரு அறிவிப்புகளின் மூலம், சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடப்போவதில்லை என்பது தெரிந்தது. இந்நிலையில் தான் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இதுபற்றி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

"பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜன் சுராஜ் வெற்றி பெற்றால், அது தேசிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டாம் எனக் கட்சி முடிவு செய்துள்ளது. அதனால் தான், ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக நேற்று வேறொரு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நான் தேர்தலில் போட்டியிட்டால், அது கட்சிக்குத் தேவையான அமைப்பு ரீதியான பணிகளிலிருந்து என் கவனத்தைச் சிதறடிக்கும்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் 10-க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெறுவோம் அல்லது 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். இதற்கு மத்தியில் நிச்சயமாக எந்த எண்ணிக்கையும் கிடைக்காது" என்றார் பிரசாந்த் கிஷோர்.

Bihar Election | Bihar Assembly Election | Bihar Elections | Bihar Assembly Elections | Bihar Election 2025 | Bihar Assembly Election 2025 | Jan Suraaj Party | Prashant Kishor |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in