2015-க்கு பிறகு குடியேறியவர்களை நாடு கடத்துவோம்: அஸ்ஸாம் முதல்வர்

"குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, 2015-க்கு முன்பு இந்தியாவுக்கு வந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முதலுரிமை உள்ளது."
அஸ்ஸாம் முதல்வர்
அஸ்ஸாம் முதல்வர்
1 min read

குடியுரிமை திருத்தச் சட்ட விதிகளின்படி 2015-க்கு பிறகு குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அஸ்ஸாம் முதல்வர் கூறியதாவது:

"2015-க்கு முன்பு இந்தியாவுக்குக் குடியேறியவர்களில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். 8 விண்ணப்பங்களில் ஆறு பேர் நேரில் ஆஜராகவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, 2015-க்கு முன்பு இந்தியாவுக்கு வந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முதலுரிமை உள்ளது. இவர்கள் விண்ணப்பிக்கவில்லையெனில், அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படும். இதுதான் சட்டரீதியான வழிகாட்டுதல். 2015-க்கு பிறகு இந்தியாவுக்கு வந்தவர்களை நாங்கள் நாடு கடத்துவோம்" என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் டிசம்பர் 2019-ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த மார்ச் 11 முதல் நடைமுறைக்கு வந்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்குப் புலம்பெயரும் முஸ்லிம்கள் நீக்கமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களுக்கு இந்திய குடியுரிமையைத் துரிதமாக வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in