ராணுவத்தைத் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்: பின்னணி என்ன?

வெறுப்பு மற்றும் பகையுணர்வால் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் எப்போதும் நாம் போரைத் தொடங்கியது கிடையாது.
ராணுவத்தைத் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்: பின்னணி என்ன?
1 min read

தற்போதுள்ள நிலையில், அண்டை நாடுகளில் இருந்து தாக்குதல் நடைபெறாது என்ற சூழலில் முற்றிலுமாக மறுக்க முடியாது, எனவே இந்திய ராணுவப்படைகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று பேசியுள்ளார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

விஜயதசமியை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலீங்கில் அமைந்துள்ள் சுக்னா கண்டோன்மென்டில் இன்று (அக்.12) நடைபெற்ற ஷஸ்த்ரா பூஜையில் ராணுவ வீரர்களுடன் கலந்துகொண்டார். இதை தொடர்ந்து வீரர்களிடையே ராஜ்நாத் சிங் பேசியவை பின்வருமாறு:

`அனைத்துவிதமான சாதகங்களுடன், எந்த ஒரு சூழலுக்கும் தயாரான நிலையில் நாம் இருக்கவேண்டும். அதுதான் இன்றைக்கான தேவை. எப்போதும் விழிப்புடன் இருப்பது அவசியம். எந்த ஒரு பொருளையும் வழிபடுவது, தேவைப்படும்போது அதை முழு சக்தியுடன் பயன்படுத்துவதற்காகத்தான். இந்தப் பூஜை தேசிய பாதுகாப்புக்கான விழிப்புணர்வையும், பொறுப்பையும் குறிக்கிறது.  

வெறுப்பு மற்றும் பகையுணர்வால் நாம் எந்த ஒரு நாட்டுக்கு எதிராகவும் எப்போதும் போரைத் தொடங்கியது கிடையாது. இந்தியர்கள் காலங்காலமாக இத்தகைய விழுமியங்களைப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் நமது நன்மைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மிகப்பெரிய அளவிலான எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்க நாம் ஒருபோதும் தயங்கமாட்டோம் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்’ என்றார்.

நேற்று (அக்.11) இந்தியாவின் சர்வதேச எல்லைகளில் நிலவும் அச்சுறுத்தல்கள் குறித்தும், எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காணொளி வாயிலாக ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ராஜ்நாத் சிங்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியா-சீனா சர்வதேச எல்லையில் அமைந்துள்ள லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in