மெஸ்ஸி நிகழ்ச்சியில் கலவரம்: மே. வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா | Messi |

கலவரம் தொடர்பாக விளக்கமளிக்க டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ்...
மெஸ்ஸி நிகழ்ச்சியில் கலவரம்: மே. வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா
மெஸ்ஸி நிகழ்ச்சியில் கலவரம்: மே. வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமாANI
1 min read

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கடந்த டிசம்பர் 13 அன்று இந்தியா வந்தார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் அவரைக் காண ரசிகர்கள் ரூ. 5000 முதல் ரூ. 18000 வரை டிக்கெட்டுகள் பெற்று காத்திருந்தனர். அப்போது, மெஸ்ஸியைக் காண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் கால்பந்து கிளப் பிரதிநிதிகள் உட்பட 80 பேர் கொண்ட ஒரு கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது. இதனால் பார்வையாளர்களால் கேலரிகளில் இருந்து ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்து மைதானத்திற்குள் வீசி கலவரத்தில் ஈடுபட்டார்கள். கேலரியின் அருகே இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பெருமளவில் மைதானத்துக்குள் நுழைந்தனர். இதனால் கலவரம் வெடித்தது.

இதையடுத்து, மைதானத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மன்னிப்பு கோரினார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றார். இதனடிப்படையில் சிறப்பு குழு உருவாக்கப்பட்டு, டிஜிபி ராஜீவ் குமார், பிதான் நகர் காவல் ஆணையம் முகேஷ் குமார் ஆகியோரிடம் 24 மணிநேரத்தில் விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் , பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி துணை காவல் ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி அனிஷ் சர்க்கார் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன், விளையாட்டு துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று விளையாட்டு அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார். இதனை முதலமைச்சர் மமதா பானர்ஜி ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் பதவி விலகினார்.

Summary

Aroop Biswas has submitted a letter to West Bengal CM Mamata Banerjee requesting to be relieved from his position as state Sports Minister. CM Mamata Banerjee accepts the resignation.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in