பிரதமர் மோடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்: விவசாயிகள் சங்கம்

"இது ஜனநாயக நாடு. தில்லியில் எங்களுடைய பேரணியை அனுமதிக்க வேண்டும்."
பேரணியைத் தடுத்து நிறுத்த தடுப்புகளுடன் காவலர்கள்
பேரணியைத் தடுத்து நிறுத்த தடுப்புகளுடன் காவலர்கள் ANI
1 min read

விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டி பொதுச்செயலாளர் சர்வான் சிங் தெரிவித்துள்ளார்.

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சன்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஆகிய விவசாய சங்கங்கள் தில்லியை நோக்கி பேரணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த பேரணியைத் தடுக்கும் விதமாக கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டு வீசி, விவசாயிகளைக் கலைத்து வந்தனர்.

இதனிடையே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மத்திய அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. விவசாயிகள் சங்கங்களும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் தெரிவித்தன. விவசாயிகள் சங்கங்கள், மத்திய அரசு இடையிலான பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இதனிடையே ஷம்பு எல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த சர்வான் சிங் கூறியதாவது:

"நாங்கள் தடுப்புகளை உடைப்போம் என்று கூறவில்லை. இரண்டு விஷயங்கள், இன்று மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பிரதமர் மோடி முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்தக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். இது அனைவருக்கும் நல்லது.

இரண்டாவது, இது ஜனநாயக நாடு. தில்லியில் எங்களுடைய பேரணியை அனுமதிக்க வேண்டும். அரசாங்கமே இந்தப் பாதையைத் திறக்க வேண்டும். எங்களுடைய திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in