சிறப்பு விசாரணைக் குழு குறித்து ஆளுநரிடம் மனு: ஹெச்.டி. குமாரசாமி

"அனைத்துக்கும் நான்தான் காரணம் என டிகே சிவகுமார் பேசுகிறார். அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். சரியான நேரத்தில் நான் பதிலளிப்பேன்."
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரஜ்வல் ரேவண்ணா காணொளி வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு தொடர்பாக ஆளுநரிடம் மனு அளிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் ஹெச்.டி. ரேவண்ணா விவகாரங்கள் குறித்து மதச்சார்பற்ற கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் முன்னாள் முதல்வரும், கட்சியின் முக்கியத் தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி பெங்களூருவில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"சிறப்பு விசாரணைக் குழு குறித்து ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஹெச்.டி. ரேவண்ணாவை மூன்று நாள்கள் சிறையிலடைக்க வேண்டும் என்பது மட்டும்தான் சிறப்பு விசாரணைக் குழுவின் நோக்கமாக உள்ளது. சிறப்பு விசாரணைக் குழு மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை நாங்கள் முதல் நாளிலிருந்தே கூறி வருகிறோம்" என்றார் குமாரசாமி.

பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய காணொளிகள் வெளியானதற்கு ஹெச்.டி. குமாரசாமிதான் காரணம் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய குமாரசாமி, "நான்தான் தயாரிப்பாளர். இயக்குனர், நடிகர் என அனைத்தும் நானே. இதுமாதிரியான கதைகள் சினிமாவில்தான் வரும். வேறு ஏதாவது சொல்லுங்கள். இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் நான்தான் காரணம் என டிகே சிவகுமார் குற்றம்சாட்டியிருக்கிறார். அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். சரியான நேரத்தில் நான் பதிலளிப்பேன்" என்றார் குமாரசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in