
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 85 குறைந்து ரூ. 9,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 680 குறைந்து ரூ. 72,560-க்கு இன்று (ஜூன் 25) விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரு நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதால் தங்கம் விலை குறைந்து வருகிறது.