6-ம் கட்டத் தேர்தலில் 59.82% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜம்மு & காஷ்மீரின் அனந்தநாக் - ரஜௌரியில் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அனந்தநாகில் வாக்களித்த வாக்காளர்..
அனந்தநாகில் வாக்களித்த வாக்காளர்..ANI

6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் ஏறத்தாழ 59.82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் ஏறத்தாழ 78.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 53.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் அனந்தநாக் - ரஜௌரி தொகுதியில் மட்டுமே இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 2019-ல் அனந்தநாக் - ரஜௌரி தொகுதியில் 14.3% வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இந்த முறை 53.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அனந்தநாக் - ரஜௌரியில் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • மேற்கு வங்கம் - 78.20 சதவீதம்

  • ஜார்க்கண்ட் - 63.27 சதவீதம்

  • உத்தரப் பிரதேசம் - 54.03 சதவீதம்

  • ஒடிஷா - 60.97 சதவீதம்

  • ஜம்மு & காஷ்மீர் - 53.38 சதவீதம்

  • பிஹார் - 54.68 சதவீதம்

  • ஹரியாணா - 59.36 சதவீதம்

  • தில்லி - 56.04 சதவீதம்

மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவுடன் ஒடிஷாவில் 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 61.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

6-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததன் மூலம், மொத்தம் 486 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு ஜூன் 1-ல் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in