

தில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்திய உமர் உன் நபி, தற்கொலைத் தாக்குதல் குறித்து பேசிய காணொளி வெளியாகியுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10 அன்று கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 20 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கார் வெடிப்பு சம்பவத்தைப் பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிபடுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை, கார் வெடிப்பில் வெடிகுண்டு வைத்து விபத்துக்குள்ளான காரை வாங்கிக் கொடுத்து அதனை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏற்கெனவே அமீர் ரஷீத் அலி, ஜசிர் வானி உள்ளிட்ட இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் மருத்துவர் உமர் உன் நபி பேசிய பதிவு செய்த விடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“தற்கொலைத் தாக்குதல் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயமாக இருக்கிறது. அதற்கு எதிராக பல்வேறு வாதங்களும் முரண்களும் உள்ளன. இது இஸ்லாத்தில் உள்ளது. இந்தத் தியாகச் செயல் என்பது ஒரு மனிதன் ஏதோ ஓர் இடத்தில், குறிப்பிட்ட ஒரு நேரத்தில் இறக்கப் போகிறேன் என்று முன்கூட்டியே யூகிப்பதாகும். எப்படியும் அவர் இறக்கப்போகிறார் என்று அனுமானிக்கப்படும் வேளையில், அவர் அதற்கு எதிராகச் சென்று, குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இறக்கப் போகிறார் என்பதாகும்” என்று பேசியுள்ளார்.
Investigators probing the blast near Delhi’s Red Fort have found a purported video of Dr Umar Un Nabi, who was behind the wheel of the car that exploded on November 10, in which he is heard calling a suicide bombing martyrdom operation.