
குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.
கடந்த 2022 முதல் நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் ஜெகதீப் தன்கர், உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு தன் பதவியை நேற்று (ஜூலை 21) ராஜினாமா செய்தார். 2027 ஆகஸ்ட் 10-ல் பதவிக்காலம் முடிவுக்கு வரவிருந்த நிலையில், திடீரென அவர் பதவி விலகியது பேசுபொருளானது.
முக்கியமான கேபினட் அமைச்சர்களான ஜே.பி. நட்டா மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் (பிஏசி) கலந்துகொள்ளாத விவகாரத்துடனும், மாநிலங்களவையில் நட்டா தெரிவித்த கருத்துக்களுடனும், ஜெகதீப் தன்கரின் இந்த திடீர் ராஜினாமாவை எதிர்க்கட்சிகள் தொடர்புபடுத்தியுள்ளன.
நேற்று (ஜூலை 21) நடைபெற்ற மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அவை முன்னவர் நட்டா மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ரிஜிஜு ஆகியோர் கலந்துகொள்ளாததால் தன்கர் வருத்தமடைந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று (ஜூலை 21) நண்பகல் 12.30 மணி அளவில் நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். ஆனால் சில மணிநேரம் கழித்து மீண்டும் மாலை 4.30 மணி அளவில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இவர்கள் கலந்துகொள்ளவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் கணக்கில் கூறியதாவது,
`இரண்டாவதாக நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு நட்டாவும் ரிஜிஜுவும் வேண்டுமென்றே வராததற்குக் காரணம், நேற்று நண்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை மிகவும் தீவிரமான ஏதோ ஒன்று நடந்திருக்கிறது’ என்றார்.
அதேநேரம், அவர்கள் இருவரும் முக்கியமான நாடாளுமன்றப் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும், முன்கூட்டியே குடியரசுத் துணைத் தலைவருக்குத் தகவல் தெரிவித்ததாகவும் நட்டா விளக்கமளித்தார்.
நேற்று (ஜூலை 21) நண்பகல் 12.30 மணி அளவில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். ஆனால் சில மணிநேரம் கழித்து மீண்டும் மாலை 4.30 மணி அளவில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இவர்கள் இடம்பெறவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் கணக்கில் கூறியதாவது,
`இரண்டாவதாக நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு நட்டாவும் ரிஜிஜுவும் வேண்டுமென்றே வராததற்குக் காரணம், நேற்று நண்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணி வரை மிகவும் தீவிரமான ஒன்று நடந்திருக்கிறது’ என்றார்.
மேலும், மாநிலங்களவில் நேற்று (ஜூலை 21) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டதிற்கு பதிலளிக்கும் விதமாக, `எதுவும் அவைக்குறிப்பில் பதிவு செய்யப்படமாட்டாது, நான் சொல்வது மட்டுமே பதிவு செய்யப்படும்’ என்று நட்டா கூறியதை குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சி, `இது குடியரசுத் துணை தலைவருக்கு நேர்ந்த அவமானம்’ என்று குற்றம்சாட்டியது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை? பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?’ என்றார்.