உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பலரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
கூட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!ANI

ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் ஏற்பட்ட காரணத்தால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் நேற்று போலே பாபா என்ற மத போதகரின் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள மக்கள் வெள்ளம் போல் திரண்ட நிலையில், மிகப்பெரிய அளவில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பலரும் அந்த கூட்டநெரிசலில் சிக்கி சிரமப்பட்டுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பலரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்மிக நிகழ்ச்சி மதியம் சுமார் 3.30 மணிக்கு முடிந்த நிலையில் போலே பாபா கிளம்பியதாகவும், அதன் பிறகு அவரை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் பார்க்கவில்லை எனவும் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in