யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு! |UPSC |

நாடு முழுவதும் 2,736 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்...
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!ANI
1 min read

2025-க்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வின் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு நடத்தப்படுகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று படிநிலைகளில் நடத்தப்படுகிறது. நேர்காணல் முடிந்த பிறகு தேர்ச்சியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.

அதன்படி 2025-க்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு, ஆக்ஸ்ட் 22 முதல் 31 வரை நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளைத் தேர்வர்கள், https://upsc.gov.in/ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தேர்வில் மொத்தம் 2,736 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வர்களில் மூவரின் முடிவுகள் மட்டும் நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தேர்வர்கள் அடுத்த நிலையான நேர்காணலுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். விரைவில் நேர்காணல் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். நேர்காணலுக்கு வரும் தேர்வர்கள் அனைத்து உரிய ஆவணங்களையும் தவறாமல் கொன்ண்டு வர வேண்டும் என்றும், அவற்றின் மென் பிரதிகளை முன் கூட்டியே வலைத்தளத்தில் பதிவேற்றிச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்ட்டுள்ளது.

Summary

The Union Public Service Commission (UPSC) has declared the results of the Civil Services Examination (CSE) Main 2025 today, November 11. Candidates who appeared for the exam can now check their results on the official UPSC website,i.e.,upsc.gov.in.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in