உலக அளவில் பணப்பரிவர்த்தனையில் முதலிடம்: யுபிஐ சாதனை

உலக அளவில் பணப்பரிவர்த்தனையில் முதலிடம்: யுபிஐ சாதனை

உலக அளவில் உள்ள 40 டிஜிட்டல் பரிவர்த்தனைத் தளங்களை ஒப்பிட்டு பே செக்யூர் அமைப்பு இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது
Published on

ரூ. 81 லட்சம் கோடி அளவுக்குப் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு உலக அளவில் நடக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் முதலிடம் பிடித்துள்ளது இந்தியாவின் யுபிஐ.

நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 3 மாதங்களில் யுபிஐ மூலம் ரூ. 81 லட்சம் கோடி அளவுக்குப் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது யுபிஐ.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இதுவரை உலகின் முன்னணி இடத்தில் இருந்துவரும் சீனாவின் பேபால், அலிபே, பிரேஸிலின் பிக்ஸ் ஆகியவற்றை முந்தியுள்ளது இந்தியாவின் யுபிஐ. உலக அளவில் உள்ள 40 டிஜிட்டல் பரிவர்த்தனைத் தளங்களை ஒப்பிட்டு பே செக்யூர் அமைப்பு இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஒரு வினாடியில் யுபிஐ மூலம் 3,729 பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. 2022-ல் இது 2,348 பணப்பரிவர்த்தனைகள் ஆக இருந்தது. 2023-ல் 117.6 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை யுபிஐ நிறைவேற்றியுள்ளது.

யுபிஐ உபயோகித்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்தியாவைத் தாண்டி மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

logo
Kizhakku News
kizhakkunews.in