நவம்பர் 24-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும்.
நவம்பர் 24-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
1 min read

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு நவம்பர் 24 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறும். மஹாராஷ்டிரம், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு நாள்களில் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகும் முதன்முறையாக கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது.

இந்தக் கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்டத்திருத்தம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மிகப் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வக்பு வாரிய சட்டத்திருத்தம் தற்போது நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் உள்ளது. இதுதொடர்புடைய ஆய்வறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக் குழு நவம்பர் 29 அன்று தாக்கல் செய்கிறது.

இதை முன்னிட்டு நவம்பர் 24 அன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in