சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை: மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் | Sanchar Saathi |

நுகர்வோர் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட செயலி சஞ்சார் சாத்தி, தேவையில்லை என்றால் அழித்துவிடலாம்...
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (கோப்புப்படம்)
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (கோப்புப்படம்)
1 min read

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமாக்கப்படவில்லை, அதை கைபேசிகளில் நிறுவுவதும் நீக்குவதும் பயனர்களின் விருப்பம் என்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கமளித்துள்ளார்.

நாடு முழுவதும் புதிய ஸ்மார்ட்போன்களில் மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு செயலியான ‘சஞ்சார் சாத்தி’ செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த உத்தரவு, பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் சர்ச்சையாக மாறிய நிலையில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இது தொடர்பான விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தின் வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்த பிரச்னைகள் ஏதும் இல்லாதபோது இதுபோல் ஏதோ ஒன்றை உருவாக்குகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு உதவுவதும் அவர்களது பாதுகாப்பின் மீது கவனம் கொள்வதும் மட்டுமே நமது கடமை. சஞ்சார் சாத்தி செயலி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்டோர் அந்தச் செயலியைத் தரவிறக்கியுள்ளார்கள். 1.75 கோடி மோசடியான கைப்பேசி இணைப்புகளைக் கண்டறிய இந்தச் செயலி உதவியுள்ளது. 20 லட்சம் தொலைந்துபோன கைப்பேசிகளைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 7.5 லட்சம் கைப்பேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள. இவை அனைத்தும் சஞ்சார் சாத்தி செயலி மூலம் சாத்தியகாமியிருக்கிறது. இது ஒட்டுக்கேட்பதையோ அழைப்புகளை உளவுபார்ப்பதையோ செய்வதில்லை. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தச் செயலியை நிறுவிக் கொள்ளவோ, நீக்கிவிடவோ முடியும். சஞ்சார் சாத்தி செயலி வேண்டாம் என்றால் நீங்கள் அதை அழித்துவிடலாம். இது முழுக்க முழுக்க நுகர்வோரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பற்றிய தவறான புரிதல்களை நான் மாற்ற விரும்புகிறேன். உதவி தேவைப்படும் அனைவருக்கும் இந்தச் செயலியை அறிமுகப்படுத்த வேண்டும். அவர்கள் அதைக் கைப்பேசியில் வைத்துக் கொள்வதும் நீக்கிவிடுவதும் அவர்களது தனிப்பட்ட உரிமை. எந்தச் செயலியைப் போல இதையும் கைப்பேசிகளில் இருந்து அழிக்க முடியும். இதனால் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படாது” என்றார்.

Summary

Union Minister for Communications Jyotiraditya Scindia explained about Sanchar Saathi app that, "If you don't want Sanchar Saathi, you can delete it. It is optional... It is our duty to introduce this app to everyone. Keeping it in their devices or not, is up to the user..."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in