விவிஐபி-க்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு

"முக்கியப் பிரமுகர்களின் பேரணிகள், சாலைப் பேரணிகள் போன்ற பொது நிகழ்வுகளின்போது கூடுதல் கவனம் மற்றும் பாதுகாப்பு அவசியம்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டின் எதிரொலியாக இந்தியாவில் விவிஐபி-க்களின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மீது ஜூலை 13-ல் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் டிரம்ப் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக இந்தியா முழுக்க விவிஐபி-க்களின் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக முக்கியத் தலைவர்கள்/பிரபலங்கள் பங்குபெறும் பேரணிகள், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் சாலைப் பேரணிகள் போன்ற பொது நிகழ்வுகளின்போது கூடுதல் கவனம் மற்றும் பாதுகாப்பு அவசியம் என மத்திய அரசு தனது குறிப்பில் வலியுறுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்புடைய சுற்றறிக்கையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 7 கொலை முயற்சி சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுதொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் துணை ராணுவப் படைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in