உயிரிழந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்: நிதி மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை | Aadhaar |

இறந்தவர்களின் ஆதார் எண்களை நீக்க குடும்பத்தினர் ஆதார் வலைத்தளத்தில் பதிவு செய்ய அறிவுரை...
உயிரிழந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்: ஆதார் ஆணையம் நடவடிக்கை
உயிரிழந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்: ஆதார் ஆணையம் நடவடிக்கை
1 min read

உயிரிழந்தவர்களில் 2 கோடி ஆதார் எண்களை நீக்கியுள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

நாட்டின் முக்கிய அடையாள அட்டையாகக் கருதப்படும் ஆதார் அட்டையை, தனித்துவ அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) என்று அழைக்கப்படும் ஆதார் ஆணையம் வழங்கி வருகிறது. ஆதார் தரவுகளின் துல்லியத்தைக் காக்கும் நடவடிக்கையை ஆதார் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இறந்தவர்கள் 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த ஆதார் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இறந்தவர்களின் தகவல்கள், இந்திய பதிவாளர் ஆணையம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், பொது விநியோக திட்டம், தேசிய சமூக உதவித்திட்டம் உள்ளிட்டவற்றில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இறந்தவர்களின் தகவல்களை பெறுவதற்கு, நிதி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இறந்தவர்களின் ஆதார் எண்கள் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட மாட்டாது. ஆனாலும், இறந்தவரின் பெயரில் நிதி மோசடிகள் நடைபெறாமல் தடுக்கவும், நலத்திட்டங்களில் ஆதார் எண் தவறாக பயன்படுத்தாமல் இருப்பக்கவும், இறந்தவர்களின் ஆதார் எண்களை நீக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.

நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இறந்தவர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்வதற்காக ஆதார் வலைத்தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த வசதியை க் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்தவரின் இறப்பு சான்றிதழ் பெற்ற பிறகு, குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் தகவல்களை பதிவு செய்து ஆதார் எண்ணை முடக்க விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுள்ளார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

UIDAI has deactivated more than 2 crore Aadhaar numbers of deceased individuals as part of a nationwide effort to maintain the continued accuracy of the Aadhaar database.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in