பாராகிளைடிங் சாகச விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

இருவேறு சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மாதிரி படம்
மாதிரி படம்ANI
1 min read

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாராகிளைடிங் சாகசத்தின்போது ஏற்பட்ட விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தில் ஜனவரி 17 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 வயது ஜெயேஷ் ராம் பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டார். அஷ்வனி குமார் என்பவர் பாராகிளைடிங்கை இயக்கியிருக்கிறார். சாகசத்தின்போது, மற்றொரு பாராகிளைடிங் சாகச வீரர் மீது மோதியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இதனால், ஜெயேஷ் ராம், அஷ்வின் குமார் சென்ற பாராகிளைடிங் நிலை தடுமாறியுள்ளது. இதன் காரணமாக இருவரும் கீழே விழுந்துள்ளார்கள். இதில் பலத்த காயமடைந்த ஜெயேஷ் ராம் மருத்துவமனக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அஷ்வினி குமார் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில் 19 வயது இளம்பெண் பாராகிளைடிங் சாகசத்தால் உயிரை இழந்துள்ளார்.

அஹமதாபாத்தைச் சேர்ந்தவர் பவ்சால் குஷி. இவர் குடும்பத்தினருடன் ஹிமாச்சலப் பிரதேசத்துக்குச் சுற்றுலா வந்துள்ளார். பாராகிளைடிங் சாகசம் மேற்கொள்ள விரும்பியதையடுத்து, இந்துருநாக் தளத்தில் பாராகிளைடிங் சாகசம் செய்துள்ளார்.

பாராகிளைடிங் சாகசத்தை மேற்கொள்வதற்கு முன்பே இவரும் பாராகிளைடிங்கை இயக்குபவரும் நிலைதடுமாறியுள்ளார்கள். இதில் மலைப் பகுதியில் இருவரும் விழுந்துள்ளார்கள். 19 வயது இளம்பெண் இதில் உயிரிழந்துள்ளார். பாராகிளைடிங்கை இயக்கியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதுதொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவற்றுக்கு மத்தியில் கோவாவில் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த 27 வயது சுற்றுலாப் பயணி மற்றும் பாராகிளைடிங்கை இயக்கிய 26 வயதுடைய நேபாளத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார்கள்.

சாகசத்தின் நடுவே, ஏதோவொரு கேபிள் அறுந்ததைத் தொடர்ந்து, இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in