ரதசப்தமி: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

பிப்ரவரி 3 அன்று பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்படாது.
ரதசப்தமி: திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 4 அன்று ரதசப்தமியை முன்னிட்டு பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4 அன்று ரதசப்தமியை முன்னிட்டு ஒருநாள் பிரம்மோற்சவம் என்கிற பெயரில் 7 வாகனச் சேவைகள் நடைபெறவுள்ளன. உற்சவரான மலையப்பர் 7 வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அன்றைய தினம், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெறிமுறை பிரபலங்கள் தவிர விஐபி ப்ரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பிப்ரவரி 3 அன்று பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்படாது.

பிப்ரவரி 3 முதல் 5 வரை திருப்பதியில் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு இலவச சர்வதர்ஷன் டோக்கன்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் ஜெ ஷ்யாமலா ராவ், கூடுதல் நிர்வாக அலுவலர் வெங்கைய சௌதரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு துறைத் தலைவர்களுடன் ரதசப்தமிக்கான தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்கள். பிப்ரவரி 4-க்குள் ரதசப்தமி கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும் என ஷ்யாமலா ராவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in