ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா வெள்ளப் பாதிப்புகளுக்கு தெலுங்கு நடிகர்கள் கோடிகளில் நிதியுதவி அளித்துள்ளார்கள்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பெய்த பெருமழையால் கடுமையான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள் பழுதடைந்துள்ளன. இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளார்கள். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு உதவும் வகையில் தெலுங்கு நடிகர்கள் அடுத்தடுத்து நிதியுதவி அளித்து வருகிறார்கள்.
சிரஞ்சீவி ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் ஆந்திரப் பிரதேச முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி அளித்துள்ளார்.
மகேஷ் பாபுவும் இரு மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார். பிரபாஸ் இரு மாநிலங்களுக்கும் மொத்தம் ரூ. 2 கோடி அளித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் இரு மாநிலங்களுக்கும் மொத்தம் ரூ. 1 கோடி அளித்துள்ளார். ஆந்திர எம்எல்ஏ பாலகிருஷ்ணா இரு மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார். ஜூனியர் என்டிஆர் தலா ரூ. 50 லட்சத்தை இரு மாநிலங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.