ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு | Reserve Bank of India |

நாட்டின் வளர்ச்சி 8% ஆக இருப்பது நிலையான சிறந்த பொருளாதாரத்தைக் குறிக்கிறது....
ரிசர்வ் வங்கி (கோப்புப்படம்)
ரிசர்வ் வங்கி (கோப்புப்படம்)
1 min read

வங்கிக்களுக்கு குறுகிய காலக் கடன் வழங்குவதற்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அந்த வகையில், இன்று வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.50%-ல் இருந்து 5.25 % ஆகக் குறைந்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது:-

“வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம் குறித்து இரு மாத நாணயக் கொள்கை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கட்டது. அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.2% உயர்ந்துள்ளது. மேலும், சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 0.25% என்ற நிலைக்குக் குறைந்துள்ளதால், வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. முதல் அரையாண்டில் வளர்ச்சி 8% மற்றும் பணவீக்கம் 2.2% ஆக இருப்பது, ஒரு நிலையான சிறந்த பொருளாதாரத்தைக் குறிக்கிறது” என்றார்.

Summary

The Reserve Bank of India has announced a reduction of 0.25% in the repo rate, the short-term lending rate for banks.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in