நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீதான குற்றப்பத்திரிகையை ஏற்க மறுப்பு: தில்லி நீதிமன்றம் | Congress |

காந்தி குடும்பத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.....
சோனியா காந்தி, ராகுல் காந்தி (கோப்புப்படம்)
சோனியா காந்தி, ராகுல் காந்தி (கோப்புப்படம்)ANI
2 min read

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, அவரது மகன் ராகுலுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க தில்லி நீதிமன்றம் மறுத்துள்ளது.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம், நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை நடத்தி வந்தது. ஆனால் சமீபத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் இந்த நிறுவனம் சிக்கியது. இதையடுத்து இந்த நிறுவனத்தை, ரூ. 50 லட்சத்திற்கு யங் இந்தியன் என்ற நிறுவனம் வாங்கியது.

இந்நிறுவனத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இதற்கிடையில், ஏஜேஎல் நிறுவனத்தின், ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, கடந்த 2014-ல் வழக்கு தொடர்ந்தார்.

இதில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், ரூ. 751 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில், இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது:-

“அமலாக்கத்துறையின் வழக்கு முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இல்லை. பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த புகாரின் அடிப்படயில் தொடரப்பட்டுள்ளது. இதனால் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. சோனியா, ராகுல் காந்தி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கின் இந்த கட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை பெற தகுதியவற்றவர்கள். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தனது மேலதிக விசாரணையைத் தொடரலாம்” என்று தெரிவித்தனர்.

இந்த உத்தரவை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றுள்ள நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

“நேஷனல் ஹெரால்டு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பதற்காக மத்திய முகமைகளை மத்திய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு சட்ட அடிப்படையுமின்றி, அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும் அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன.

உண்மை தங்கள் பக்கம் இருப்பதாலும், எந்த அச்சமும் இல்லாததாலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளார்கள். அதே வேளையில், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களில் உறுதியாக நிற்கும் காந்தி குடும்பத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்த விழுமியங்களை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

மீண்டும் மீண்டும் கையாளப்படும் இந்த பழிவாங்கும் அணுகுமுறை, முதன்மை புலனாய்வு நிறுவனங்களின் நம்பகத்தன்மையை களங்கப்படுத்துகிறது. மேலும், அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மட்டுமே சுருக்கிவிடுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

The Delhi court has refused to accept the charge sheet filed by the Enforcement Directorate against senior Congress leader Sonia Gandhi and her son Rahul Gandhi in the National Herald case.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in