இந்தியத் தொல்லியல் துறை இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது.
கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வுப் பணியைத் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டு பல்வேறு தகவல்களைக் கொண்டு வந்தார். இந்த அகழாய்வின்போது 5000-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் கிடைத்தன.
தென் மண்டலத்தின் மூத்த தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணீயாற்றி வந்த அமர்நாத்துக்குத் தற்போது இந்தியத் தொல்லியல் துறை இயக்குநராக பதவி உயர்வு கிடைத்துள்ளது. தில்லி தொல்லியல் துறை தலைமை அலுவலகத்தில் அமர்நாத் பணிகளை மேற்கொள்ளவுள்ளார்.