குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: அதானி குழுமம்

"இதுதொடர்பாக அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்."
குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: அதானி குழுமம்
1 min read

அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள லஞ்சப் புகார் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சூரிய மின்சக்தித் திட்டத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக கௌதம் அதானி மீது அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது.

"அதானி கிரீன் இயக்குனர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித் துறை மற்றும் அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. இந்தக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்படுகின்றன.

இவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே, குற்றம் நிரூபிக்கப்படும் வரை எதிர்மனுதாரர்கள் குற்றமற்றவர்கள் என அமெரிக்க நீதித் துறையே தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அதானி குழுமம் அனைத்து சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, கட்டுப்பட்டு இயங்கக்கூடியது என்பதை பங்குதாரர்கள், கூட்டாளிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரிடமும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in