
கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா - கர்நாடக சங்கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஆகியோரின் காதல் திருமணம் மார்ச் 9 அன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா. இவர் பாஜக இளைஞரணியின் தேசியத் தலைவராகவும் உள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பிரபல கர்நாடக சங்கீத பாடகி சிவஸ்ரீ. இவரை யூடியூபில் 2 லட்சம் பேரும் இன்ஸ்டகிராமில் 1 லட்சம் பேரும் பின்தொடர்கிறார்கள். அயோத்தி ராமர் கோயிலில் சிவஸ்ரீ பாடிய பக்திப் பாடலை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
2022-ல் தேர்தல் பிரசாரத்துக்காக தேஜஸ்வி சூர்யா, சென்னை வந்திருந்தபோது, சிவஸ்ரீயின் கச்சேரியைப் பார்த்துள்ளார். பிறகு இருவரும் நட்பு ரீதியாகப் பேச ஆரம்பித்து அந்த உறவு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
இந்நிலையில் பெங்களூருவில் வரும் மார்ச் 9 அன்று கர்நாடக மற்றும் தமிழ் பாரம்பரிய முறைப்படி தேஜஸ்வி சூர்யா - சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் திருமணம் நடைபெறவுள்ளது.