
2008 நவம்பர் 26-ல் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் ஒரு பகுதி மும்பை தாஜ் ஹோட்டல் நடைபெற்றது. இது தொடர்பாக நேஷனல் ஜியோகிரஃபிக் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது.
அந்த ஆவணப்படத்தில் மும்பை தாக்குதல் குறித்து ரத்தன் டாடா பேசியவை பின்வருமாறு:
`மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக என்னிடம் தகவல் தெரிவித்தனர். உடனே நான் தாஜ் ஹோட்டலுக்குத் தொலைபேசியில் அழைத்தேன். ஆனால் யாரும் அதை எடுக்காதது விசித்திரமாக இருந்தது. எனவே நானே காரில் ஏறி ஹோட்டலுக்கு வந்தேன். ஆனால் உள்ளே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை உள்ளே செல்லவிடாமல் பணியிலிருந்த காவலாளி தடுத்தார்.
அந்த நேரத்தில் சுமார் 300 விருந்தினர்கள் ஹோட்டலில் தங்கியிருந்தனர். உணவகங்கள் நிறைந்திருந்தன. அவர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்று தெரியாமல் பணியாளர்கள் பயத்தில் உறைந்துபோயிருந்தனர். விருந்தினர்களை பாதுகாப்பான இடத்துக்கு அவர்கள் கொண்டு சென்றனர். ஆனால் அவ்வாறு ஈடுபட்டிருந்தபோது அதில் பலர் உயிரிழந்தனர்’ என்றார்.
தாஜ் ஹோட்டலுக்குள் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற 3 நாட்களும் இரவு, பகல் பாராமல் தாஜ் ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்தார் ரத்தன் டாடா. இந்த தாக்குதலுக்குப் பிறகு ஒரு மாதத்தில் மீண்டும் தாஜ் ஹோட்டல் திறக்கப்பட்டது. தாஜ் பணியாளர்களையும் மட்டுமல்லாமல் அதைச் சுற்றி இருந்த தெருவோர வியாபாரிகளுக்கும் உதவி செய்தார்.
2024-ல் பாகிஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை, டாடா சன்ஸ் குழுமம் தாண்டி சாதனை படைத்தது.