1993 குண்டுவெடிப்பு வழக்கு: அப்துல் கரீம் துண்டாவை விடுவித்தது தடா நீதிமன்றம்

1993 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் கரீம் துண்டாவை விடுவித்தது தடா நீதிமன்றம்
1993 குண்டுவெடிப்பு வழக்கு: அப்துல் கரீம் துண்டாவை விடுவித்தது தடா நீதிமன்றம்
1 min read

1993 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்துல் கரீம் துண்டாவை தடா நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்தது. போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் 80 வயது துண்டாவை விடுதலை செய்தது.

அப்துல் கரீம் துண்டாவுக்கு எதிராக எந்தவொரு வலுவான ஆதாரத்தையும் முன்வைக்க சி.பி.ஐ. தவறிவிட்டது என்று துன்டாவின் வழக்கறிஞர் ஷப்கத் சுல்தானி கூறினார்.

"அப்துல் கரீம் துண்டா நிரபராதி. இன்று நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அப்துல் கரீம் துண்டா அனைத்து பிரிவுகளிலிருந்தும், அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். தடா, இந்திய தண்டனைச் சட்டம், ரயில்வே சட்டங்கள், ஆயுதச் சட்டம், வெடிபொருள் சட்டம் ஆகியவற்றில் சிபிஐ அரசுத் தரப்பால் எந்த உறுதியான ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை" என்று வழக்கறிஞர் சுல்தானி செய்தியாளர்களிடம் கூறினார்.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று நான்கு ரயில்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் துன்டா செயல்பட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

"அப்துல் கரீம் துண்டா நிரபராதி என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தோம். இர்பான் மற்றும் ஹமீதுதீன் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றும் சுல்தானி கூறினார்.

1993 டிசம்பர் 5-6 நள்ளிரவில் லக்னோ, கான்பூர், ஹைதராபாத், சூரத் மற்றும் மும்பையில் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டதாக துண்டா, இர்பான், ஹமிதுதீன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in