ரேவண்ணாவைக் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அனுமதி

14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், 6 நாள்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரேவண்ணாவைக் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்கு அனுமதி

மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளத் (ஜேடிஎஸ்) தலைவர் தேவெகௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொளி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த விசாரணைக் குழு முன்பு ரேவண்ணா ஆஜராகாமல் இருந்தார். விசாரணைக்கு ஆஜராகாதது மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்களான தேவெ கௌடா மற்றும் குமாரசாமியையே கோபத்துக்குள்ளாக்கியது.

இதைத் தொடர்ந்து, மே 31 அன்று சிறப்பு விசாரணைக் குழு முன்பு ஆஜராவதாக இணையத்தில் காணொளியை வெளியிட்டார். இதன்படி, ஜெர்மனியிலிருந்து பெங்களூரு வந்த ரேவண்ணா சிறப்பு விசாரணைக் குழுவினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

இவரை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க எம்எல்ஏ, எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு அனுமதி கோரியது. இவரை 6 நாள்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், சிறப்பு விசாரணைக் குழு காவலில் பிரஜ்வல் ரேவண்ணாவை அவரது வழக்கறிஞர் காலை 9.30 முதல் 10.30 வரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை முடிவடையும் வரை, ரேவண்ணா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in