இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
"குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிலிருந்து இந்தியா வந்த இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறி உள்ளது. இவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை சீராக உள்ளது.
இவருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக இவருடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவருக்கு யார் மூலம் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய, இவருடன் தொடர்பிலிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை தொற்றை ஆகஸ்ட் 14-ல் அவசர நிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு.