சட்டப்பிரிவு 370 ரத்து: மறுசீராய்வு மனுக்களை மே 1-ல் விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

செப்டம்பர் 30,2024-க்குள் ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்குக் கெடு விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
சட்டப்பிரிவு 370 ரத்து: மறுசீராய்வு மனுக்களை மே 1-ல் விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிரான மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் மே. 1-ல் விசாரிக்கிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ல் ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்கள் மீது கடந்த டிசம்பரில் 16 நாள்கள் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், செப்டம்பர் 30,2024-க்குள் ஜம்மு-காஷ்மீருக்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையானது மே 1-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in