சிபிஐ கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு: ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்

4-வது குற்றப்பத்திரிக்கையில் கெஜ்ரிவால், துர்கேஷ் பதக், அமித் அரோரா, ஆஷிஷ் மாத்தூர், வினோத் சௌஹான், சரத் ரெட்டி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்
சிபிஐ கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு: ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
ANI
1 min read

தில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று (செப்.05) நிறைவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த மார்ச் 21-ல் தில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தது அமலாக்கத்துறை. இதைத் தொடர்ந்து மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கில் ஜூன் 26-ல் கெஜ்ரிவாலைக் கைது செய்தது சிபிஐ. இதற்கடுத்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவுடன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் கெஜ்ரிவால்.

அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜூலை 12-ல் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்திருந்தாலும், சிபிஐ கைது செய்த வழக்கு நிலுவையில் இருந்ததால் திஹார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளிவரவில்லை. இதைத் தொடர்ந்து சிபிஐ கைதை எதிர்த்தும், அந்த வழக்கில் ஜாமீன் கோரியும் தில்லி உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்களைத் தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்.

ஆனால் சிபிஐ கெஜ்ரிவாலைக் கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்தது தில்லி உயர் நீதிமன்றம். மேலும் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கவும் மறுத்துவிட்டது. இதற்கடுத்து சிபிஐ தன்னைக் கைது செய்ததை எதிர்த்தும், அந்த வழக்கில் ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்களைத் தாக்கல் செய்தார் கெஜ்ரிவால். கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முடிந்து, தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

சிபிஐ பதிந்துள்ள தில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த செப்.03-ல் 4-வது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் கெஜ்ரிவால், துர்கேஷ் பதக், அமித் அரோரா, ஆஷிஷ் மாத்தூர், வினோத் சௌஹான், சரத் ரெட்டி உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in