இஸ்லாமியர்கள் பகுதியைப் பாகிஸ்தான் என்ற கூறிய கர்நாடக நீதிபதி: உச்ச நீதிமன்றம் கண்டனம்

நாம் அனைவருமே மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கப்படுகிறோம் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்
இஸ்லாமியர்கள் பகுதியைப் பாகிஸ்தான் என்ற கூறிய கர்நாடக நீதிபதி: உச்ச நீதிமன்றம் கண்டனம்
PRINT-83
1 min read

பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று குறிப்பிட்டுப் பேசிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ சானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஸ்ரீ சானந்தா நீதிமன்றத்தில் மேற்கொண்ட விசாரணை தொடர்பான 2 காணொளிகள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன. முதல் காணொளியில், ஒரு வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது பெங்களூருவில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று குறிப்பிடுகிறார் நீதிபதி ஸ்ரீ சானந்தா.

இரண்டாவது காணொளியில், மற்றொரு வழக்கு தொடர்பான விசாரணையின்போது பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் அநாகரீகமாக முறையில் பேசியுள்ளார் நீதிபதி ஸ்ரீ சானந்தா. இந்த இரண்டு காணொளிகள் தொடர்பாக தாமாக முன்வந்து இன்று விசாரணை மேற்கொண்டது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு.

அப்போது, `கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது நீதிபதி ஸ்ரீ சானந்தா அவர்கள் தெரிவித்த கருத்துகள் ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளன. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தகுந்த அறிவுரைகளைப் பெற்று இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

மேலும், `நீதிபதிகள் எத்தகைய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுமென வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது, நாம் அனைவருமே மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கப்படுகிறோம் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in