
நடிகை சன்னி லியோன் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி திருமணமான பெண்களுக்கான ரூ. 1000 நிதி உதவியை மாதந்தோறும் பெற்ற வந்த நபரின் மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது.
சத்தீஸ்கரில் பாஜக அரசின் மஹ்தாரி வந்தன் யோஜனா என்கிற நிதி உதவித் திட்டம் நடைமுறையில் உள்ளது. திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாகப் பயனர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.
சத்தீஸ்கர் பஸ்தார் மாவட்டத்தில் தலூர் கிராமத்தில் வீரேந்திர ஜோஷி என்பவர், இந்தத் திட்டத்தின் கீழ் சன்னி லியோனின் பெயரில் கணக்குத் தொடங்கி, மாதம் தோறும் ரூ. 1000 பெற்று மோசடி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வீரேந்திர ஜோஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டதின் பயனர்களில் பாதி நபர்கள் போலிகள்தான் என்று இந்தப் பிரச்னையை முன்வைத்து மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் குற்றம்சாட்டியுள்ளார்.