மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மன்னிப்புக் கோர வேண்டும்: ஜெயா பச்சன்

"குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, 'மைக்' அணைக்கப்பட்டது."
மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மன்னிப்புக் கோர வேண்டும்: ஜெயா பச்சன்
1 min read

மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நாடாளுமன்றத்தில் தன்னுடைய செயல்பாடுகளுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.

"மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசிய விதத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நாங்கள் பள்ளிக் குழந்தைகள் அல்ல. எங்களில் சிலர் மூத்த குடிமக்கள். மாநிலங்களவைத் தலைவரின் செயல்பாடு என்னைக் கோபமடையச் செய்தது. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, 'மைக்' அணைக்கப்பட்டது.

இதை எப்படி செய்ய முடியும்?. எதிர்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அவை நாகரிகமற்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.

நீங்கள் பிரபலமானவராக இருக்கலாம். ஆனால், அதை நான் பொருட்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று என்னிடம் கூறினார். நான் நாடாளுமன்ற உறுப்பினர். 5-வது முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளேன். நான் என்ன பேசுகிறேன் என்பது எனக்குத் தெரியும்.

நாடாளுமன்றத்தில் பேசப்பட்டு வரும் விதம் என்பது இதுவரை யாரும் பேசாத ஒரு விதம். அவர் மன்னிப்புக் கோர வேண்டும்" என்றார் அவர்.

மாநிலங்களவையில் சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சன் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in