கேரள பருவமழை - கோப்புப்படம்
கேரள பருவமழை - கோப்புப்படம்ANI

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடக்கம்: வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் நிகழும் மழைப் பொழிவில் ஏறத்தாழ 70% பருவமழையால் கிடைக்கிறது.
Published on

கேரளத்தில் நடப்பாண்டின் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட (ஜுன் 1) நான்கு நாட்களுக்கு முன்னதாக மே 27-ல் தேதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்திய நிலப்பரப்பில் தென்மேற்கு பருவமழையின் வருகை, கேரளரத்தில் பருவமழை தொடங்குவதன் மூலம் தெரியவரும். மேலும், தென்மேற்கு பருவமழையின் தொடக்கம் வெப்பமான மற்றும் வறண்ட காலத்திலிருந்து, மழைக்காலத்திற்கு தட்பவெப்ப சூழல் மாறுவதைக் குறிக்கும் ஒரு முக்கியமான குறியீடாகும்.

2005 முதல் கேரளாவில் பருவமழை தொடங்கும் தேதிக்கான முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி அல்லது அதில் இருந்து 7 நாட்கள் `நிலையான விலகலுடன் (முன் பின்)’ கேரளத்தில் தொடங்கும்.

இந்நிலையில், நடப்பாண்டின் தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-ல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது.

2015-ஐ தவிர, கடந்த 20 ஆண்டுகளில் (2005-2024) கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்த இந்திய வானிலை ஆய்வு மைத்தின் கணிப்புகள் சரியானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-க்கு முன்பாக தொடர்ந்து நான்கு ஆண்டுகள் சராசரிக்கும் கூடுதலாகவே மழை பெய்துள்ளது. எல் நினோவின் தாக்கத்தால் அந்த ஆண்டு, நீண்டகால சராசரி அளவைவிட பருவமழை குறைவாகவே பதிவாகியிருந்தது.

இந்தியாவில் நிகழும் மழைப் பொழிவில் ஏறத்தாழ 70% பருவமழையால் கிடைக்கிறது. இந்தியாவின் 51% சதவீத விவசாயப்பரப்பு, அதாவது நாட்டின் உற்பத்தியில் 40% பருவமழையை நம்பியே உள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in