தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 460.84 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம்

அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ. 778 கோடியும், குஜராத் மாநிலத்தில் ரூ. 605 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 460.84 கோடி பறிமுதல்
தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 460.84 கோடி பறிமுதல்@ECISVEEP

தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 50000 மேல் யாரும் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் முன் இதுவரை ரூ. 4650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதில், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ. 778 கோடியும், குஜராத் மாநிலத்தில் ரூ. 605 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலின்போது ரூ. 3475 கோடி பறிமுதலான நிலையில், இதுவரை இல்லாத அளவில் தற்போது ரூ. 4650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டதில் ரூ. 395 கோடி ரொக்கமாகவும், ரூ. 1142 கோடி பரிசுப் பொருட்களாகவும், ரூ. 562 கோடி மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மார்ச் 1 முதல் நாடு முழுவதும் ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 100 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in