மஹாராஷ்டிரத்தில் வாக்குப்பதிவு மந்தம்!

நான்தெட் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.
மஹாராஷ்டிரத்தில் வாக்குப்பதிவு மந்தம்!
1 min read

ஒரே கட்டமாக நடைபெறும் மஹாராஷ்டிர மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது.

மஹாராஷ்டிர சட்டப்பேரவையின் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் 38 தொகுதிகளுக்கும் இன்று (நவ.20) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி மஹாராஷ்டிராவில் 18.14 சதவீத வாக்குகள் பதிவாகி, வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம், ஜார்க்கண்டில் 31.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மஹாராஷ்டிரத்தில் புதிய அரசை தேர்தெடுக்க நடைபெறும் இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகியவை அடங்கிய மஹாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அடங்கிய மஹா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது

இந்தப் பொதுத்தேர்தலில் மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மஹாராஷ்டிரத்தில் உள்ள 9.64 கோடி வாக்காளர்களுக்காக சுமார் 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்தெட் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

வாக்குப்பதிவு தொடங்கியதும், சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் சோனு சூட், ஜான் ஆபிரஹாம், அக்‌ஷய் குமார், ராஜ்குமார் ராவ், ஃபர்ஹான் அக்தர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஷக்திகாந்த தாஸ், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் வாக்களித்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in