குற்றச்சாட்டுகளை உரிய முறையில் அளிக்கவும்: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்! | Rahul Gandhi

வாக்காளர் பட்டியலில் தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் தகுதியான வாக்காளர்களை நீக்குதல் குறித்து நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
குற்றச்சாட்டுகளை உரிய முறையில் அளிக்கவும்: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்! | Rahul Gandhi
1 min read

வாக்காளர் பட்டியல் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து உரிய படிவத்தை பூர்த்தி செய்து புகார் அளிக்குமாறு கர்நாடக மாநில தலைமை தேர்தல் அலுவலர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஆக. 7) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது, 

`தேர்தல் முடிவுகள் முன்பே தீர்மானிக்கப்படுகின்றன. 16 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எங்கள் ஆய்வுகள் கூறின; நாங்கள் 9-ல் வென்றோம். ஒரு மக்களவைத் தொகுதியைத் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதி மீது கவனம் செலுத்த நாங்கள் முடிவு செய்தோம்.

மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் கவனத்தை செலுத்தினோம். அனைத்து தரவுகளும் தேர்தல் ஆணையத்தின் 2024 தரவுகளில் இருந்து பெறப்பட்டன. 6.26 லட்சம் வாக்குகள் மக்களவைத் தேர்தலின்போது பதிவாகின. 32,707 வாக்குகள் வித்தியாசத்தில், 6,58,915 வாக்குகள் பெற்று பாஜக வெற்றி பெற்றது.

1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகியுள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர்’ என்றார்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநில தலைமை தேர்தல் அலுவலர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது,

`இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, பத்தி 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் தகுதியான வாக்காளர்களை நீக்குதல் குறித்து நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

1960 வாக்காளர் பதிவு விதிகளின்படி விதி 20(3)(b)-ன் கீழ் இணைக்கப்பட்ட பிரகடனம்/சத்தியப்பிரமாணத்தில் கையொப்பமிட்டு, அத்தகைய வாக்காளர்களின் பெயர்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள், இதனால் தேவையான நடவடிக்கைகள் தொடங்கப்படும்..’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in