
ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
நடிகரும், மாடலுமான சித்தார்த் மல்லையா அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கும் ஜாஸ்மின் என்பவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், இவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது தன் காதலை வெளிப்படுத்துவது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் சித்தார்த் மல்லையா.
இதைத் தொடர்ந்து இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.
அவரும் ஜாஸ்மினும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “திருமண வாரம் துவங்கிவிட்டது” எனக் கூறியுள்ளார்.