முதல்வராக 5 ஆண்டுகள் நிறைவு செய்வார் சித்தராமையா: யதீந்திரா சித்தராமையா | Yathindra Siddaramaiah | Siddaramaiah |

"அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது பற்றி கட்சிக்குள் யாரும் பேசவில்லை."
Siddaramaiah will complete his tenure as Karnataka Chief Minister, says Yathindra Siddaramaiah
சித்தராமையா, டிகே சிவக்குமார் (கோப்புப்படம்)ANI
1 min read

கர்நாடக முதல்வராக சித்தராமையா 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்வார் என அவருடைய மகனும் சட்டமேலவை உறுப்பினருமான யதீந்திரா சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சித்தராமையா முதல்வர் பதவியில் தொடர்வார் என்று தொடக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் துணை முதல்வராக உள்ள டிகே சிவகுமார் முதல்வர் பதவியில் தொடர்வார் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சிக்குள் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. இக்கருத்தை மேலிடத்தில் வலியுறுத்தும் வகையில் சிவகுமார் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தில்லியில் முகாமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இப்பிரச்னையைத் தாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம் காங்கிரஸ் மேலிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வராக சித்தராமையாக 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்வார் என அவருடைய மகன் கருத்து தெரிவித்துள்ளது அங்கு பேசுபொருளாகியுள்ளது.

யதீந்திரா சித்தராமையா தெரிவித்ததாவது:

"அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது பற்றி கட்சிக்குள் யாரும் பேசவில்லை. எனது தந்தையும் ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. இதன்மூலம், கடந்த காலங்களில் இப்படியாக எந்தவொரு வியூகமும் வகுக்கப்படவில்லை. கட்சித் தலைமை ஏதும் வாக்கு கொடுத்திருந்தால், அவர்கள் அதைத் தீர்த்து வைப்பார்கள். தற்போதைய சூழல்களில் முதல்வர் மாற்றப்பட வேண்டிய தேவை இல்லை. சித்தராமையா திறமையான மற்றும் நல்ல ஆட்சியை மட்டும் தரவில்லை. ஆட்சியில் புகார்கள் இல்லை, ஊழல்கள் இல்லை. தனிப்பட்ட முறையில் கர்நாடக முதல்வராக சித்தராமையா 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்வார்" என்றார் யதீந்திரா சித்தராமையா.

Summary

Siddaramaiah will complete his tenure as Karnataka Chief Minister, says Yathindra Siddaramaiah

Siddaramaiah | Yathindra Siddaramaiah | Karnataka Congress | Congress | DK Shivakumar |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in