இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று குறிப்பிடக்கூடாது: உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் என அனைவரும் இங்கு நடைபெறுபவை நீதிமன்றங்களுக்கு அப்பாற்ப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் என்று குறிப்பிடக்கூடாது: உச்ச நீதிமன்றம்
PRINT-83
1 min read

பெங்களூருவில் உள்ள இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று குறிப்பிட்டு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ சானந்தா பேசிய விவகாரத்தில் அறிவுரை கூறிய உச்ச நீதிமன்ற அமர்வு, இந்தியாவின் எந்தப் பகுதியையும் பாகிஸ்தான் எனக் குறிப்பிடக்கூடாது என்று தெரிவித்தது.

சமீபத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின்போது, பெங்களூருவில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் ஒரு குறிப்பிட்டார் நீதிபதி ஸ்ரீ சானந்தா. உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இவ்வாறு பேசும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

இது தொடர்பாக கடந்த செப்.20-ல் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நீதிபதி ஸ்ரீ சானந்தாவுக்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்தது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் இன்று (செப்.25) விசாரணை நடத்தியது உச்ச நீதிமன்றம்.

அப்போது, `இந்தியாவின் எந்த பகுதியையும் யாரும் பாகிஸ்தான் என்று குறிப்பிடக்கூடாது. இது தேசிய ஒற்றுமைக்கு எதிரானது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் என அனைவரும் நீதிமன்றங்களில் நடைபெறுபவை நீதிமன்றங்களுக்கு அப்பாற்ப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தன் கருத்துக்கு நீதிபதி (ஸ்ரீ சானந்தா) வருத்தம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கையின்போது அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே நீதித்துறையின் கண்ணியத்தையும், நலனையும் கருத்தில்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு நாங்கள் நோட்டீஸ் பிறப்பிக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்தது உச்ச நீதிமன்ற அமர்வு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in