
மும்பையில் ஆன்லைன் மூலம் வாங்கிய ஐஸ்-கிரீமில் மனித விரல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் மருத்துவர் ஒருவர் ஆன்லைன் மூலம் ஐஸ்-கிரீம் வாங்கியுள்ளார். ஐஸ்-கிரீமில் பார்ப்பதற்கு முந்திரி போல ஏதோ இருந்திருக்கிறது. அவரும் முந்திரி என நினைத்து அதை அருந்தியிருக்கிறார். ஆனால், பிறகு அது முந்திரயல்ல என்று தெரிந்தவுடன் அவர் அதைக் கீழே துப்பியுள்ளார். மருத்துவர் என்பதால், அது மனித விரல் என்பதை அவரால் எளிதில் அடையாளம் காண முடிந்தது.
இதையடுத்து, அதைப் பத்திரமாக எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் வாங்கிய யம்மோ ஐஸ்-கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் மனித விரலை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.
மனித விரல் என்பதால், குற்றப் பின்னணி இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதால், அந்தக் கோணத்திலும் விசாரணையை மேற்கொள்ள காவல் துறையினர் திட்டமிட்டுள்ளார்கள்.
யம்மோ ஐஸ் கிரீம்ஸ், வால்கோ ஃபுட் நிறுவனத்தால் 2012-ல் தொடங்கப்பட்டது.