இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியமாக உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி இடைநிற்றல் விகிதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் கஸ்வான் மக்களவையில் கேள்வியெழுப்பியிருந்தார். இதுதொடர்பான 2023-24-ம் ஆண்டின் தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானில் மாவட்ட வாரியாக இடைநிற்றல் விகிதம் பற்றிய தரவுகளை வெளியிட்டது மட்டுமில்லாமல், மாநிலங்கள் வாரியாகவும் இடைநிற்றல் விகிதத்தின் தரவுகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியமாக உள்ளது. தெலங்கானாவில் மொத்த இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியமாக இருந்தாலும், ஆண் மாணவர்கள் விகிதம் 0.1 ஆக உள்ளது.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி இடைநிற்றல் விகிதம் தமிழ்நாட்டில் 5.4 ஆக உள்ளது. இதில் மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் விகிதம் 8.0 ஆகவும் மாணவிகள் பள்ளி இடைநிற்றல் விகிதம் 2.9 ஆகவும் உள்ளன. இதே பிரிவில் கேரளத்தின் விகிதம் 2.2 ஆகவும், மேற்கு வங்கத்தின் விகிதம் 12.0 ஆகவும்
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் கேரளத்தில் 2.2 ஆகவும், மேற்கு வங்கத்தில் 12.0 ஆகவும் உள்ளன. சண்டிகரில் 5.2 ஆக உள்ளது. இதுவே ஹிமாச்சல் பிரதேசத்தில் 4.6 ஆக உள்ளது. பஞ்சாபில் இதன் விகிதம் 5.2 ஆக உள்ளது.
இந்தப் பட்டியலில் பெரும் சவாலைச் சந்தித்து வருவது பிஹார் தான். 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் பிஹாரில் 13.7 ஆக உள்ளது. இந்தப் பிரிவில் இரட்டை இலக்கத்தில் இருப்பது பிஹார் மட்டும் தான்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் பிஹாரில் 25.9 ஆக உள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 20.9 ஆக உள்ளது.