பாபர் மசூதி இடிப்பு குறித்து உத்தவ் தரப்பு சரச்சைக் கருத்து: கூட்டணியிலிருந்து விலகிய சமாஜவாதி

"மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இப்படி பேசினால், பிறகு பாஜகவுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்?"
சமாஜவாதி மாநிலத் தலைவர் (கோப்புப்படம்)
சமாஜவாதி மாநிலத் தலைவர் (கோப்புப்படம்)ANI
1 min read

பாபர் மசூதி குறித்து சிவசேனை (உத்தவ் தாக்கரே) தரப்பு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததால், மஹா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து விலகுவதாக சமாஜவாதி அறிவித்துள்ளது.

மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் தாக்கரே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இந்த மூன்று கட்சிகள் மட்டும் 279 தொகுதிகளில் போட்டியிட்டன.

103 தொகுதிளில் போட்டியிட்ட காங்கிரஸ் 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 89 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனை (உத்தவ் தாக்கரே) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 87 தொகுதிகளில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 10 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. இந்தக் கூட்டணியுடன் இணைந்து களம் கண்ட சமாஜவாதி இரு இடங்களில் வெற்றி பெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. பாஜக தலைமையிலான மெகா கூட்டணி வாக்கு இயந்திரத்தின் முறைகேட்டால் வெற்றி பெற்றதாகக் கூறி மஹா விகாஸ் அகாடி கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தார்கள்.

ஆனால், இவர்களுடையக் கூட்டணியில் இடம்பெற்ற சமாஜவாதி மாநிலத் தலைவர் அபு அசிம் அஸ்மி மற்றும் ரைய் ஷைக் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

இதைத் தொடர்ந்து, மஹா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து விலகுவதாக சமாஜவாதி மாநிலத் தலைவர் அறிவித்தார். இதற்குக் காரணமாக உத்தவ் தாக்கரே ஆதரவாளரின் செய்தித்தாள் விளம்பரம்.

பாபர் மசூதியை இடித்தவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன் என்ற பாலாசாஹேப் தாக்கரே கூற்றுடன் பாபர் மசூதியைக் கொண்டு விளம்பரம் கொடுத்துள்ளார். மிலிண்ட் நார்வேகர். இந்த விளம்பரப் படத்தில் பாலாசாஹேப் தாக்கரேவுடன் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே புகைப்படத்துன் தன்னுடையப் படத்தையும் மிலிண்ட் நார்வேகர் இணைத்திருந்தார்.

இதுவே கூட்டணியிலிருந்து விலகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

சமாஜவாதி மாநிலத் தலைவர் அபு அசிம் அஸ்மி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் பாராட்டும் விதமாக சிவசேனை (உத்தவ் தாக்கரே தரப்பு) சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் புகழ்ந்து எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார். மஹா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். அகிலேஷ் யாதவுடன் பேசப்போகிறேன். மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் இப்படி பேசினால், பிறகு பாஜகவுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்களுடன் ஏன் இணைந்து பயணிக்க வேண்டும்?" என்று சமாஜவாதி மாநிலத் தலைவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in