'பூஜ்ஜியம்': தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட கல்வி நிதி! | Samagra Shiksha Scheme

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 6,264.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சௌதரி
மத்திய கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சௌதரிANI
1 min read

சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசால் ஒரு ரூபாய் நிதி கூட ஒதுக்கப்படாதது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவையைச் சேர்ந்த திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார், சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரங்களை மத்திய கல்வி அமைச்சகத்திடம் கேட்டிருந்தார்.

மத்திய இணை கல்வி அமைச்சர் ஜெயந்த் சௌதரி, திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார் கேள்விக்குப் பதிலளித்துள்ளார். இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

2024-25-ல் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 6,264.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிஹாருக்கு ரூ. 4,217.81 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ. 3,090.65 கோடி என மொத்தம் 11 மாநிலங்களுக்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. 2024-25 நிதியாண்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு நிதியாக ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. எனினும் தமிழ்நாட்டுக்கு 2022-23-ல் ரூ. 2,107.23 கோடியும் 2023-24-ல் ரூ. 1,876.16 கோடியும் ஒதுக்கப்பட்டன.

தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே, தமிழ்நாட்டுக்கு இந்த நிதி ஒதுக்கப்படும் என்பது மத்திய அரசின் தொடர்ச்சியான வாதமாக உள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் வழக்கு தொடரப்பட்டது.

2024-25 -ல் அதிக நிதி ஒதுக்கப்பட்ட மாநிலங்கள்

  • உத்தரப் பிரதேசம் - ரூ. 6,264.79 கோடி

  • பிஹார் - ரூ. 4,217.81 கோடி

  • ராஜஸ்தான் - ரூ. 3,090.65 கோடி

  • குஜராத் - ரூ. 1,245.54 கோடி

  • ஆந்திரம் - ரூ. 1,240.11 கோடி

  • ஒடிஷா - ரூ. 1,672.39 கோடி

  • மஹாராஷ்டிரம் - ரூ. 1,126.24 கோடி

  • மத்தியப் பிரதேசம் - ரூ. 3,434.71 கோடி

  • ஜார்க்கண்ட் - ரூ. 1,074.44 கோடி

  • அசாம் - ரூ. - 2,026.77 கோடி

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி

  • தமிழ்நாடு - 0.00

  • கேரளம் - 0.00

  • மேற்கு வங்கம் - 0.00

Attachment
PDF
மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி நிதி
Preview

Samagra Shiksha Scheme | Union Government | Ministry of Education | Ministry of School Education and Literacy | Tamil Nadu | Kerala | West Bengal | Uttar Pradesh

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in