குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ணக் கொடியேற்றினார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. உடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. உடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்ANI
1 min read

75-வது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லி கடமைப் பாதையில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

75-வது குடியரசு நாள் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட தில்லியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தில்லி கடமைப் பாதைக்கு முதலில் வந்த பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்றார்.

21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூவர்ணக் கொடியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றினார். கடமைப் பாதையில் முப்படை உள்ளிட்ட படைகளின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். முப்படை அணிவகுப்பை முற்றிலும் ராணுவ வீராங்கனைகள் முதன்முறையாக மேற்கொண்டார்கள்.

குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு நடைமுறை, குடியரசு நாள் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in