மணிப்பூரில் 11 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

ஏப்ரல் 22-ல் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மணிப்பூரில் 11 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

உள்மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 11 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 102 மக்களவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரவு 7 மணி நிலவரப்படி மணிப்பூரில் மொத்தம் 69.18 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவின்போது ஒரு சில வாக்குச் சாவடிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. சில இடங்களில் வாக்கு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில் ஒருவர் காயமடைந்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திடமிருந்து வழிகாட்டுதல் வந்துள்ளது. இதனடிப்படையில் 11 வாக்குச் சாவடிகளுக்கு ஏப்ரல் 22-ல் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

32 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உள்மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வெளிமணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதி மொத்தம் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 26-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in