
ராமேஸ்வரம் செல்லும், அங்கிருந்து பிற இடங்களுக்கு கிளம்பும் ரயில்களின் நேரங்களை மாற்றியமைத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்.6-ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதற்கு மறுநாளில் இருந்து, ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது. ராமேஸ்வரத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களின் நேரத்தை மாற்றியமைத்து தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி,
1) ராமேஸ்வரம்-திருச்சி விரைவு ரயில் (16850), இனி பிற்பகல் 2.50 மணிக்கு பதிலாக, பிற்பகல் 3 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும்.
2) ராமேஸ்வரம்-மதுரை பயணியர் ரயில் (56714), இனி பிற்பகல் 3.25 மணிக்கு பதிலாக, பிற்பகல் 3.20 மணிக்கு மதுரையை வந்தடையும்.
3) ராமேஸ்வரம்-மதுரை பயணியர் ரயில் (56716), இனி மாலை 6 மணிக்கு பதிலாக, மாலை 6.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும்.
4) மதுரை-ராமேஸ்வரம் பயணியர் ரயில் (56711), இனி காலை 10.45 மணிக்கு பதிலாக, காலை 10.30 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும்.
5) ராமேஸ்வரம்-திருப்பதி விரைவு ரயில் (16780), இனி மாலை 4.20 மணிக்கு பதிலாக, மாலை 4.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும்.
6) திருப்பதி-ராமேஸ்வரம் விரைவு ரயில் (16779), இனி அதிகாலை 4.50 மணிக்கு பதிலாக, அதிகாலை 4.45 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும்.
7) ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16752), இனி மாலை 5.30 மணிக்கு பதிலாக, மாலை 5.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும்.
8) சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் விரைவு ரயில் (16751), இனி காலை 8.10 மணிக்கு பதிலாக, காலை 7.55 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும்.
9) ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (22662), இனி இரவு 8.35 மணிக்கு பதிலாக, இரவு 8.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும்.
10) சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம் விரைவு ரயில் (22661), இனி அதிகாலை 4.50 மணிக்கு பதிலாக, அதிகாலை 4.45 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும்.
11) ராமேஸ்வரம்-கோவை விரைவு ரயில் (16617), இனி இரவு 7.30 மணிக்கு பதிலாக, இரவு 7.55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும்.
12) ராமேஸ்வரம்-கன்னியாகுமரி விரைவு ரயில் (22621), இனி இரவு 9.10 மணிக்கு பதிலாக, இரவு 9.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும்.
13) அயோத்தி கண்டோன்மென்ட்-ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் (22614), இனி அதிகாலை 2.55 மணிக்கு பதிலாக, அதிகாலை 2.45 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும்.
14) ஃபிரோஸ்பூர்-ராமேஸ்வரம் ஹும்சாஃபர் வாராந்திர அதிவிரைவு ரயில் (20498), இனி இரவு 8.35 மணிக்கு பதிலாக, இரவு 8.25 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும்.