போதைப் பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது!

2.6 கிலோ போதைப் பொருளை கடத்தியதாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்ANI
1 min read

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாதில் கடந்த ஜூலை 14 அன்று 2.6 கிலோ போதைப் பொருளை தெலங்கானா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 நபர்களிடம் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதனை ஆய்வு செய்ததில், முடிவுகள் அவர்கள் போதைப் பொருள் உட்கொண்டதை உறுதிப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in