
ரயில்ஒன் செயலியை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
பயணிகளின் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த ரயில்ஒன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் நிறுவப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நாளில் ரயில்ஒன் செயலி வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்ஒன் செயலி ரயில் சார்ந்த அனைத்து செயலிகளின் பயன்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. மற்ற செயலிகளில் எப்படி ஐஆர்சிடிசி செயல்படுகிறதோ, அதைப்போல ரயில்ஒன் செயலியிலும் ஐஆர்சிடிசி செயல்படும். இதன்மூலம், ரயில்ஒன் செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பதிவில்லாத யூடிஎஸ் டிக்கெட்டுகளை 3 சதவீத தள்ளுபடியுடன் ரயில்ஒன் செயலியில் பெற்றுக்கொள்ளலாம். ரயில் எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்பதைக் கண்டறியலாம். பயணிகள் தங்களுடைய குறைகளை இந்தச் செயலி மூலம் தீர்த்துக்கொள்ளலாம். இணையவழியில் உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம். போர்டர்களை புக் செய்துகொள்ளலாம். டாக்ஸி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
முன்பு, மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் அனைத்தையும் வெவ்வேறு செயலிகள் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. இதன்மூலம், பயணிகள் வெவ்வேறு செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை.